கஞ்சா விற்ற வாலிபர் கைது
கடையநல்லூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடையநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராம் கணேஷ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த மேலக்கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகையா மகன் சுபாஷ் (வயது 22) என்பவரை பிடித்து விசாரித்தனா். அதில் அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.