கஞ்சா விற்ற வாலிபர் கைது
தேவர்குளத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை அருகே தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவர்குளத்தில் உள்ள தனியார்பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் கண்ணன் (வயது 25) என்பதும், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.