அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து உடையார்பாளையம், துலாரங்குறிச்சி, வாணத்திரியான்பட்டிணம், இடையார் புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாணத்திரியான்பட்டினம் முருகன்கோவில் அருகில் கஞ்சா விற்ற திருச்சி மாவட்டம் தைலாக்குளம் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.