கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-16 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற மன்னார்குடியை சேர்ந்த கவியரசன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்