கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் ஒரு திரையரங்கம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த பவித்ரன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.