கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-05 17:39 GMT

விழுப்புரம், 

வளவனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ப.வில்லியனூர் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார், மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில் பிடிபட்ட அந்த நபர், ப.வில்லியனூர் எம்.ஜி. ஆர். காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்த விஜயரங்கன் மகன் தினேஷ் (வயது 19) என்பதும், தப்பி ஓடியவர் அதே கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தினேஷை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2,150 மற்றும் செல்போன், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முருகையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்