கஞ்சா விற்ற வாலிபர் கைது
சென்னை செனாய் நகரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேத்துப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செனாய் நகர் பிள்ளையார் கோவில் தெரு, கந்தன் தெரு சந்திப்பில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர், செனாய் நகர் வைத்தியநாதன் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 29) என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.