கஞ்சா விற்ற வாலிபர் கைது

மணலூர்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-04 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை விளந்தை கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் விரைந்து வந்து மேற்படி கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த அதே கிராமம் வேலவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜவேல் மகன் கருணா என்கிற கருணாகரன்(வயது 20) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்