கஞ்சா விற்ற வாலிபர் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-11 06:15 IST


பெ.நா.பாளையம்


பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் மத்தம்பாளையம் கோட்டை பிரிவு, ஒண்ணிபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒண்ணிபாளையம் பிரிவு அருகே போலீசாரை பார்த்ததும் ஒருவர் மூட்டையுடன் தப்பியோட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை துரத்தி சென்று பிடித்தனர். அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில்் 5 கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியைச் சேர்ந்த சுஷாந்தகுமார் (வயது 26) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்