கஞ்சா விற்ற வாலிபர் கைது
தேனியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தேனியில், பெரியகுளம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த தங்கமலை (வயது 27) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தங்க மலையை கைது செய்தனர்.