போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

Update: 2023-07-26 19:30 GMT

பீளமேடு

கோவையில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சவுரிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பீளமேடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை சோதனை செய்தனர். அதில் அவர் போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் இருகூர் பகுதியை சேர்ந்த பிரவீன் (22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

.


Tags:    

மேலும் செய்திகள்