கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கூடலூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளுமாறு போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மேல் கூடலூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தாமஸ் மணி என்பவரது மகன் சஞ்சய் (வயது 21) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.