கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டிவனம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Update: 2023-03-10 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கர்ணாவூர் பாட்டை ரோடு, சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பாட்டை ரோடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஆனஸ்ட் ராஜ் என்கிற சுண்டி(வயது 21) என்பதும், 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்