கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-26 19:47 GMT

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த லெப்பைகுடிக்காடு ஜமாலியா நகரை சேர்ந்த உமர்பாரூக்கின் மகன் நியாஸ் அகமது (வயது 29) என்பவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். நியாஸ் அகமதுவிடம் இருந்து 10 கிராம் எடையுள்ள 5 கஞ்சா பொட்டலங்கள், ரூ.1,370, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்