தூத்துக்குடியில் நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் சிவராம்குமார் (வயது 21). இவரும், தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்த மாயாண்டி மகன் ராஜபாண்டி (30) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜபாண்டி அரிவாளால் சிவராம்குமாரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து சிவராம்குமார் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்கு பதிவு செய்து, ராஜபாண்டியை கைது செய்தார்.