கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அமுதாநகரை சேர்ந்தவர் ஜூடு பொன்னையா (வயது 48). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கனிராஜ் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக ஜூடு பொன்னையா வீட்டில் இருந்தபோது அங்கு கனிராஜ் வந்தார். அப்போது, திடீரென்று அவர், ஜூடு பொன்னையாவிடம் தகராறு செய்து, வீட்டில் நின்ற கார் கண்ணாடியை உடைத்து, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜூடு பொன்னையா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் வழக்குப்பதிவு செய்து கனிராஜை கைது செய்தார்.