கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ? உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரங்கப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கணபதி (வயது 25) என்பவர் கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கணபதியை கைது செய்தனர்.