டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
பீளமேடு அருகே டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை காளப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் அஜய் (வயது 35). டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் பன்னீர்செல் வம் என்பவரது காரில் சென்று பீளமேடு அருகே டைட்டில் பார்க் முன்பு நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நீலாம்பூர் குமரன் நகரை சேர்ந்த சாமிநாதனுக்கும் (52), அஜய்க்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. சாமிநா தன் மீதான வழக்கில் அஜய் சாட்சி என்பதால் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.