குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-29 07:03 GMT

திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சி, போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் முகமது யூசப். இவரது மனைவி பிரவீனா பானு (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் 3 குழந்தைகள் உள்ளனர். பிரவீனா பானு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், திருவேற்காடில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி பணிபுரிய இருப்பதாக கணவரிடம் கூறியதாகவும், அதற்கு முகமது யூசப் தனது அக்கா வீடு தாம்பரத்தில் இருக்கிறது அங்கிருந்து வேலைக்கு செல் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் மனமுடைந்த பிரவீனாபானு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரவீனா பானுவின் தாய் நூர்ஜஹான் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் பிரவீனா பானு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்