வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-17 18:37 GMT

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள வடப்பட்டி மேலூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 37). இவர் வெள்ளையாபுரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரிடம் 30-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளிகள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் பாண்டியனிடம் முன் பணம் பெற்ற வாலிபர் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேலையை விட்டு நின்று விட்டதாகவும், கொடுத்த முன்பணத்தை கேட்டபோது அந்த வாலிபருக்கும், பாண்டியனுக்கு தகராறு ஏற்பட்டு பாண்டியன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்