வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-01 19:15 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த வெப்படை அருகே புது மண்டபத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் இளையராஜா (வயது 27). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இளையராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேகர் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்