வாலிபர் தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2022-09-26 22:29 GMT

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் தருவை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குட்டி (வயது 20). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துக்குட்டி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்