விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மத்தூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்
போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அருகே உள்ள உத்தமூப்பர்கொட்டாயை சேர்ந்தவர் சந்துரு (வயது 22). இவர் கணினி அறிவியல் டிப்ளமோ படிப்பு படித்துள்ளார். தொடர்ந்து உயர் படிப்பு படிப்பதற்காக பெற்றோரிடம் கேட்டார். அதற்கு பெற்றோர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்துரு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சந்துரு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.