வாலிபர் தற்கொலை

விளாத்திகுளம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-09-18 19:00 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்டராமன் மகன் பார்த்திபன் (வயது 30). இவர் கடந்த பொங்கல் பண்டிகை தினத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் ஏற்பட்டு அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்