இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-27 18:45 GMT

கமுதி, 

கமுதி அருகே உள்ள கீழராமநதி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுவேதா(22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சரத்குமார் கிளாமரம் பகுதியில் டீ கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மதியம் சுவேதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுவேதாவின் உடலை கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுவேதாவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக பரமக்குடி உதவி கலெக்டர் அப்தாப் ரசூல், தாசில்தார் சேதுராமன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்