இளம்பெண் பலாத்காரம்; வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் குச்சனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). இவர் நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஈஸ்வரனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.