திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்த ராமநாதன்-மேனகா தம்பதியின் மகள் ஸ்ரீதிலகா (வயது 25). இவர் திருச்சி ரெயில் நிலையம் அருகே ராக்கின்ஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டு சென்ற ஸ்ரீதிலகா, பின்னர் வீடு திரும்பில்லை. அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய தாயார் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஸ்ரீதிலகாவை தேடி வருகிறார்.