கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பட்டியை சேர்ந்தவர் தர்மா. இவருடைய மனைவி ஜெயம் (வயது 60). தர்மா ஏற்கனவே இறந்து விட்டார். நேற்று ஜெயத்தின் மகள் விஜி(20) மணப்பட்டி நான்கு வழி சாலையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சாலை ஓரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக விஜி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் விபின்ராஜை கைது செய்தனர்.