செல்போன்கள் திருடிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

நெல்லிக்குப்பத்தில் செல்போன்கள் திருடிய வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளார்.

Update: 2022-06-03 19:59 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் தீனஸ்ரீ. இவர் கடந்த 10.8.2021 அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அவரது செல்போனையும், அவருடைய உறவினர்கள் 2 பேரின் செல்போன்களையும் யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மந்தாரக்குப்பத்தை சேர்ந்த சிவசங்கர் (35) என்பவர் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில் அனைத்து சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி வனஜா தீர்ப்பு அளித்தார். அதில், சிவசங்கர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வனஜா் தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்