சாலை விபத்தில் இளம்பெண் படுகாயம்

சாலை விபத்தில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.;

Update: 2022-08-11 18:31 GMT

தவிட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் கலைவாணி (வயது 34). இவர் தனது ஸ்கூட்டரில் கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெரு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் சரக்கர புளியமரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கலைவாணி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கலைவாணி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் ராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்