சென்னிமலை அருகே இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை;

Update: 2022-06-28 19:56 GMT

நாகை மாவட்டம் கீவலூர் தாலூகா திருப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் பரிமளா (வயது 28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 3 வருடங்களுக்கு முன்பு பரிமளாவிற்கும், அவருடைய கணவர் சசிகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சசிகாந்த் தனது 8 வயது மகனுடன் ஆந்திரா சென்று விட்டார். அதன்பிறகு பரிமளா ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ஹாஸ்டலில் தனது தங்கை ஈஸ்வரியுடன் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் தான் பார்த்த நிறுவனத்தில் கணக்கு தவறுதலாக எழுதியதாகவும், அதனால் விஷம் குடித்துவிட்டதாகவும் கடந்த 25-ந் தேதி தனது தங்கை ஈஸ்வரியிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து பரிமளாவை பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பரிமளா சிகிச்சை பலனின்றி கடந்த 26-ந் தேதி இறந்துவிட்டார்.

இதுகுறித்து பரிமளாவின் தம்பி சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்