எலி மருந்தை தின்று இளம்பெண் தற்கொலை

எலி மருந்தை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-09-01 18:54 GMT

இளம்பெண் தற்கொலை

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியா அருள் பிரபா (வயது 25). இவரது கணவர் விவேக் பிரபாகரன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தாயின் வீட்டில் இருந்த ஆரோக்கியா அருள் பிரபா சம்பவத்தன்று வீட்டில் எலி மருந்தை (விஷம்) தின்றார். இதில் அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கியா அருள் பிரபா இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் அவர் இறந்ததால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகின்றார்.

கூலித்தொழிலாளி

இதேபோல் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (43), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டில் லட்சுமணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக லட்சுமணன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்