விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
விழுப்புரம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகள் மகாலட்சுமி(வயது 23). சம்பவத்தன்று இவர் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். தீராத வயிற்றுவலி காரணமாக மகலாட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாயார் நீலவேணி கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.