ஆன்லைனில் சூதாடிய வாலிபர் தற்கொலை

கடனில் வாங்கிய காருக்கு தவணை செலுத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால் சூதாடிய வாலிபர் ரூ.30 ஆயிரத்தை இழந்தார். இதனால் விபரீத முடிவு எடுத்து அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-07-19 18:45 GMT

 கீழக்கரை,

கடனில் வாங்கிய காருக்கு தவணை செலுத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால் சூதாடிய வாலிபர் ரூ.30 ஆயிரத்தை இழந்தார். இதனால் விபரீத முடிவு எடுத்து அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆன்லைன் ரம்மி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பசுபதி (வயது 25). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கார் வாங்கிய அவர், அதற்கு தவணை முறையில் பணம் கட்டி வந்துள்ளார். சில மாதமாக பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் வசித்தது ஓட்டு வீடு என்பதால் வங்கி ஊழியர்கள் கடன் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் காருக்கு பணம் செலுத்தாததால் கம்பெனியில் இருந்து காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

கடனை சரிக்கட்ட ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் சம்பாதிக்கலாம் என நினைத்துள்ளார்.

இதற்காக ஆன்லைன் ரம்மி விைளயாட தொடங்கினார். ஆனால், ரூ.30 ஆயிரம் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் பசுபதி தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுபதி உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்