டெய்லரை தாக்கிய வாலிபர் கைது
நெல்லையில் டெய்லரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை டவுன் நல்லமுத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). டெய்லர். இவர் சம்பவத்தன்று டவுன் சாலியர் தெருவில் மணிகண்டன் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த டவுன் பிட்டாபுரத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி மகன் மகேஷ்குமார் (31) என்பவர் கணேசனிடம் திடீரென தகராறு செய்து அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.