தொழில்நுட்ப உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தொழில் நுட்ப உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-28 18:45 GMT


தொழில் நுட்ப உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளராக 15 பேர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம்.

எந்த பிரச்சினையும், இடையூறும் ஏற்படாமல் பணியாற்றி வருகிறோம். பணியின் போது இடையூறுகளையும், சவால்களையும் சிறப்பான முறையில் சந்தித்து பணியாற்றி வருகிறோம். எங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து இந்த பணியை தொடர்ந்து வழங்கிட வேண்டும். பணி நிரந்தரம் செய்து, முறையான ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மயான சாலை

திட்டச்சேரி கோதண்டராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். இங்குள்ள மயானத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க அரசு முயன்று வரும் நிலையில், தனி நபர்கள் அந்த வழியை அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் இந்த மயான சாலை அமைக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடையூறு இன்றி மயான சாலை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்