பாஸ்போர்ட்டில் பக்கங்கள் கிழிப்பு; ஒருவர் கைது
பாஸ்போர்ட்டில் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செம்பட்டு:
சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் காலை திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்த துரைராஜ்(வயது 49) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, பாஸ்போர்ட்டில் இருந்து 4 பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவரை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள், ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.