சிதம்பரம் கோவிலில் அதிகாரிகள் குழு மீண்டும் வருகை: தீட்சிதர்கள் கடும் வாக்குவாதம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மீண்டும் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் சென்றுள்ளனர்.;

Update: 2022-06-07 11:56 GMT

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு - செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்தநிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையின் அதிகாரிகள் குழு மீண்டும் வருகை தந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ஆய்வுக்கு தீட்சிதர்கள் காலையில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5 பேர் கொண்ட் அதிகாரிகள் மீண்டும் வருகை தந்துள்ளனர்.

குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் கணக்குகளை பராமரித்து வருகிறோம் என தீட்சிதர்கள் கூறினர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மீண்டும் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்