எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி

கோட்டூரில் எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி நடந்தது

Update: 2022-06-07 17:25 GMT

கோட்டூர்;

கோட்டூர் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்க விழா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் த.செல்வம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் நா. சுப்ரமணியன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பி.பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியை மீனாட்சி பயிற்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.கோட்டூர் ஒன்றியத்திலுள்ள 76 தொடக்கப்பள்ளிகள், 28 நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணித பயிற்சி அளிக்கப்படுகிறது, ஆசிரியர் பயிற்றுனர்கள் காளிதாஸ், கல்பனா மற்றும் ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்