ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், முருகபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுகலை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கோரிக்கையை விளக்கி பேசினார்.பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளுக்கு அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்குவதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் ஊக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் தங்க சேகர், பிரபாகரன், தமிழ்ச்செல்வன், ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.