ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-21 18:22 GMT

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் கே.சாந்தகுமார் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜி.திருப்பதி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் ஆசிரியை எஸ்.அம்சவேணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்