ஆசிரியர்கள் போராட்டம்

சம்பளம் வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-02-03 19:24 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மனுவில் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கவில்லை என்பதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்