முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி கற்ற முடியாமல் அவதியடைந்துள்ளனர் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி கற்ற முடியாமல் அவதியடைந்துள்ளனர் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி கற்ற முடியாமல் அவதியடைந்துள்ளனர் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெற்கு தொகுதி துணை தலைவர் ராஜா முகமது, துணை செயலாளர் சாதிக் பாஷா தலைமையில் முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஹவுசிங் யூனிட்டில் முதலிபாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 351 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இங்கு 2 ஆசிரியர்களை கொண்டே கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் ஆசிரியர்கள் போதுமான அளவுக்கு நியமிக்கப்படவில்லை. இதன்காரணமாக பள்ளி மாணவ-மாணவிகளின் சேர்க்கையும் குறைந்துவிட்டது. இருக்கின்ற மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக பெற்றோர்கள் சேர்ந்து 3 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து கல்வி கற்பித்து வருகிறார்கள். பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு
பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாத்துரை அளித்த மனுவில், 'பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி மங்கலம் ரோட்டில் உள்ளது. இந்த பள்ளியை சுற்றி 27 ஏக்கர் பூமி இருந்தது. தற்போது அரசு தொடக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி போன்றவை அமைந்துள்ளன. இந்த பள்ளிக்கு உண்டான விளையாட்டு மைதானம் 3 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களின் துணையுடன் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளது. இதனால் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்ட முடியாத நிலை உள்ளது. அரசு பள்ளி நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.