வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீஞ்சூரில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2022-07-22 06:07 GMT

மீஞ்சூர் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். செயலாளர் மாலினி முன்னிலை வகித்தார். பொருளாளர் அலெக்ஸ்டைனீஷியஸ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுவர்ணாபாய் கோரிக்கைகளை விளக்கி உரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் வாழ்த்துரை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்