ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

களக்காடு, அம்பையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-21 19:23 GMT

களக்காடு:

களக்காடு, அம்பையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

களக்காடு வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி களக்காடு வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் எபநேசர் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பகவதி, முருகன் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் கல்வி மாவட்ட ஆசிரியர் கூட்டணி தலைவர் ஜான் கென்னடி, வட்டார செயலாளர் பாஸ்கர், பெருமாள், தினேஷ், தனசிங் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் சொக்கேஸ்வரி நன்றி கூறினார்.

அம்பை

இதேபோல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அம்பாசமுத்திரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பை வட்ட தலைவர் ஜான் தாமஸ் அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் உஷா மாலதி முன்னிலை வைத்தார். அம்பை வட்ட செயலாளர் மகாதேவன் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சேரன்மாதேவி கல்வி மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனி சந்திரசேகரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் புஷ்பா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்