ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் சென்னையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து தேனீர் இடைவேளையில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள அலுவலக முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆசிரியர் இயக்கங்களின் பொறுப்பாளர் மோதிலால் தலைமை தாங்கினார். சேக் சிந்தாமதார் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினர். முடிவில், மணிமாறன் நன்றி கூறினார்.