அரவிந்த் கண் மருத்துவமனையில் ஆசிரியர் தின விழா
நெல்லையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆலோசகர் டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். தலைமை கண் மருத்துவர் ஆர்.மீனாட்சி தொடக்க உரையாற்றினார். கண்தான விழிப்புணர்வு உரையை டாக்டர் பாத்திமா வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சமீனா கலந்து கொண்டு 70 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கி பேசினார். விழாவில் அரவிந்த் கண் வங்கி பொறுப்பாளர் சாரதா, ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி நன்றி கூறினார்.