ஆசிரியர் தின விழா

பெரியதாழை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-06 14:47 GMT

தட்டார்மடம்:

பெரியதாழை சிறுமலர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முன்னாள் மாணவர் ஜெயேந்திரன் தலைமை தாங்கினார். மதுரை மறை மாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார். மாணவி ரசிகா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார். ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் சுசீலன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்