ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம் அறிவிக்கக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டரிடம் மனு

அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம் அறிவிக்கக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Update: 2023-04-03 17:09 GMT

அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம் அறிவிக்கக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

பகுதி நேர ஆசிரியர்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்புக்குழுவினர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப வழி கல்வி போன்ற துறைகளில் கடந்த 12 ஆண்டுகளாக 12 ஆயிரத்து 200 பகுதி நேர ஆசிரியர்கள் பங்காற்றி வருகிறார்கள்.

ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம்

குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி தங்களது பணி நேரத்துக்கு மேல் பணியாற்றி போட்டிகளில் பங்கேற்க செய்தும், நடுவர்களாகவும் பங்காற்றினார்கள். பகுதிநேர பணியில் இருந்து முழுமையான முறையில் மாணவர்களுக்கு தேவையான சிறப்பு கல்வியை கொண்டு சேர்ப்பதில் பெரும் தொய்வு உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது நிரந்தர தீர்வாக அமையும். இருப்பினும் அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு தற்காலிக தீர்வாக ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் கூடிய அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணி என்பதை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்