நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பிக்க திரண்டனர்

Update: 2022-07-06 16:27 GMT

\

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதியானவர்கள் திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலை முதல் ஆண்களும், பெண்களும் குவிந்தனர். ஒரேநாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து பணி செய்ய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதுபோல் பல்லடம், உடுமலை, தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் அதிகம் பேர் விண்ணப்பித்ததால் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்